சீனாவில் படிக்க உதவித்தொகை | Kalvimalar - News

சீனாவில் படிக்க உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் உயர்கல்வி துறைமும், சீனா அரசாங்கமும் இணைந்து சீனாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகின்றன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்பு நிலைகள் மற்றும் தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பு: 12ம் வகுப்பை நிறைவு செய்த 25 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள்.


முதுநிலை பட்டப்படிப்பு: இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 35 வயதிற்கு உட்பட்டவர்கள்.


ஆராய்ச்சி படிப்பு: முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 40 வயதிற்கு உட்பட்டவர்கள்.


ஜெனரல் ஸ்காலர் புரொகிராம்: 12ம் வகுப்பை நிறைவு செய்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சீனியர் ஸ்காலர் புரொகிராம்: 50 வயதிற்கு உட்பட்ட முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் அல்லது பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.


இதர தகுதிகள்: 

இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். கல்வி அல்லது ஆராய்ச்சி அல்லது பயிற்சிக்காக வெளிநாடுகளில் ஏற்கனவே சென்று இந்தியா திரும்பியவர்கள், நாடு திரும்பி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டியது அவசியம்.


உதவித்தொகை விபரம்:

மொத்தம் 40 பேருக்கு சீன அரசாங்கம் கல்வி உதவித்தொகையை வழங்குகிறது. முழு உதவித்தொகை விபரங்களை கேம்பஸ் சீனா இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இந்திய அரசாங்கம், இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், இந்தியாவில் இருந்து சீனா செல்வதற்கான விமானக் கட்டணத்தை மற்றும் ஏற்றுக்கொள்கிறது. 


முக்கிய குறிப்பு: 

இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓர் ஆண்டு சீன மொழி பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகே, அவர்கள் விண்ணப்பித்த படிப்பிற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், சின மொழியிலேயே அனைத்து படிப்புகளும் கற்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிக்கும்முறை: www.campuschina.org  மற்றும் http://proposal.sakshat.ac.in/scholarship/ ஆகிய இரண்டு இணையதளங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24, 2020


விபரங்களுக்கு: https://mhrd.gov.in/ 

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us