ஜெட் தேர்வு | Kalvimalar - News

ஜெட் தேர்வு

எழுத்தின் அளவு :

சினிமா மற்றும் தொலைக்காட்சி சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான, சத்யஜித் ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா மற்றும் பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பூனே வழங்கும் முழுநேர படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய தேர்வு, ’ஜாயின்ட் என்ட்ரன்ஸ் டெஸ்ட் -ஜெட்’!

இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையின் அடுத்த நிலைக்கு தேர்வர்கள் தகுதிபெறுவர். இந்த இரண்டு கல்வி நிறுவனங்களால் மட்டுமே நடத்தப்பட்டு வரும் இத்தேர்வை, இந்த ஆண்டு சத்யஜித் ரே பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஏற்று நடத்துகிறது.

தகுதிபெறும் படிப்புகள்:
இத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் கீழ்க்கண்ட படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும்.

3 ஆண்டு முதுநிலை படிப்புகள்:
* புரொடியூசிங் பார் பிலிம் அண்ட் டெலிவிஷன் 
* அனிமேஷன் சினிமா
* ஆர்ட் டைரக்‌ஷன் அண்ட் புரொடக்சன் டிசைன்
* டைரக்‌ஷன் அண்ட் ஸ்கிரீன்பிளே ரைட்டிங்
* சினிமாட்டோகிராபி
* எடிட்டிங்
* சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் டிசைன்

2 ஆண்டு முதுநிலை படிப்புகள்:
* ஸ்கிரீன் ஆக்டிங்
* ஸ்கிரீன் ரைட்டிங்

2 ஆண்டு டிப்ளமா படிப்புகள்:
* டைரக்‌ஷன் அண்ட் புரொடியூசிங் 
* சினிமாட்டோகிராபி
* எடிட்டிங்
* சவுண்ட் பார் எலக்ட்ரானிக் அண்ட் டிஜிட்டல் மீடியா
* எலக்ட்ரானிக் அண்ட் டிஜிட்டல் மீடியா மேனேஜ்மெண்ட்
* ரைட்டிங் பார் எலக்ட்ரானிக் அண்ட் டிஜிட்டல் மீடியா

ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்புகள்:
* டைரக்‌ஷன்
* எலக்ட்ரானிக் சினிமாட்டோகிராபி
* வீடியோ எடிட்டிங்
* சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் டெலிவிஷன் இன்ஜினியரிங்

கல்வித் தகுதி:
சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் சவுண்ட் டிசைன் படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பில் இயற்பியலை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.  ஆர்ட் ரைக்‌ஷன் அண்ட் புரொடக்‌ஷன் டிசைன் படிப்பிற்கு் இளநிலை பட்டப்படிப்பில், அப்ளைடு ஆர்ட்ஸ், பெயிண்டிங், ஆர்க்கிடெக்சர், ஸ்கல்ப்ச்சர், இன்டீரியர் டிஷைன் போன்ற கலை சார்ந்த ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான டிப்ளமா படிப்பை படித்திருக்க வேண்டும். இதர அனைத்து படிப்புகளுக்கும் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை படித்திருந்தால் போதும்.

இடஒதுக்கீடு: 
மாணவர் சேர்க்கையில், எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதமும், ஓ.பி.சி.,-என்.சி.எல்., பிரிவினருக்கு 27 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு உண்டு.

தேர்வு மையங்கள்: 
தேசிய அளவிலான இத்தேர்வு, மொத்தம் 27 இடங்களில் நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 24, 2020

தேர்வு நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 15 மற்றும் 16, 2020

விபரங்களுக்கு: https://applyadmission.net/jet2020

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us