பகுதிநேர பி.இ., | Kalvimalar - News

பகுதிநேர பி.இ.,

எழுத்தின் அளவு :

வேலைக்கு செல்பவர்கள் பயன்பெறும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி மற்றும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., (சுயநிதி) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்புகள்:

காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி: 

* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

* எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்


மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி: 

* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங்


படிப்பு காலம்: 3.5 ஆண்டுகள் - 7 செமஸ்டர்கள்


வகுப்பு நேரம்: வார நாட்களில் மாலை 6.15 முதல் 9.15 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் முழுநேரம்.


தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 3 ஆண்டுகள் கொண்ட் டிப்ளமா படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எந்த வயதினரும் சேர்க்கை பெறலாம். குறைந்தபட்ச உடல் தகுதி எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31, 2019


விபரங்களுக்கு: www.annauniv.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us