கோவா பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

கோவா பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்புகள்: பல்வேறு துறைகளில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.லிப்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகள்.


தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது இறுதியாண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை:  பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறையின் படி, தேசிய இட ஒதுக்கீட்டின் கீழ், இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கண்ட படிப்புகளில் சேர்க்கை பெறலாம். பொதுவாக, கோவா யுனிவர்சிட்டி அட்மிஷன் ரேங்கிங் டெஸ்ட் (ஜி.யு.-ஏ.ஆர்.டி., ) எனும் பிரத்யேக நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.  


எனினும், எம்.ஏ., -வெல்னஸ் அண்ட் கவுன்சிலிங் (டான் போஸ்கோ கல்லூரி), எம்.பி.ஏ., (கோவா பிசினஸ் ஸ்கூல்), எம்.பி.ஏ.,-எக்ஸிகியூட்டிவ், ஒருங்கிணைக்கப்பட்ட எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி.,-மரைன் பயோடெக்னாலஜி ஆகிய படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு இந்த நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 13


விபரங்களுக்கு: www.unigoa.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us