என்.சி.இ.ஆர்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

என்.சி.இ.ஆர்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரைனிங் ஓர் ஆண்டு டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த திறன் மேம்பாடு, கல்வி கற்பிக்கும் விதம், சமூக- உணர்வு மற்றும் நெறிமுறை சார்ந்த பிரச்சனைகளை கையாளும் விதம் ஆகியவற்றை கற்பிக்கும் நோக்கில் இந்த படிப்பு என்.சி.இ.ஆர்.டி.,யால் வழங்கப்படுகிறது.

படிப்பு: டிப்ளமா இன் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங் - வழிகாட்டல் மற்றும் ஆலோசனை. 

படிப்பு காலம்: 6 மாதகால தொலைநிலைக் கல்வி, 3 மாதகால நேரடி பயிற்சி மற்றும் 3 மாதகால இன்டர்ன்ஷிப் உட்பட மொத்தம் ஓர் ஆண்டு.

கல்வி வளாகங்கள்: புதுடில்லி, அஜ்மீர், போபால், புவனேஷ்வர், மைசூர், ஷில்லாங்.

சேர்க்கை இடங்கள்: ஒவ்வொரு மையத்திலும் தலா 50 இடங்கள்.

தகுதி: இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி நிர்வாகிகள், பயிற்சி பெறாத வழிகாட்டுநர்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15

விபரங்களுக்கு: www.ncert.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us