டி.என்.பி., நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

டி.என்.பி., நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

முதுநிலை மருத்துவ டிப்ளமா (டி.என்.பி.,) படிப்புகளுக்கான தகுதி மற்றும் தரவரிசைக்கு அவசியம் எழுத வேண்டிய பொது நுழைவுத் தேர்வான டி.என்.பி.-பி.டி.சி.இ.டி., (டிப்ளமாட் நேஷனல் போர்டு -(போஸ்ட் டிப்ளமா) சென்டர்லைஷ்டு என்ட்ரன்ஸ் டெஸ்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.




என்.பி.இ., எனும் நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன், கணினி வாயிலாக இத்தேர்வை நடத்த உள்ளது.




படிப்புகள்: அனெஸ்தீசியாலஜி, டெர்மட்டாலஜி வெனராலஜி அண்ட் லெப்ரசி, நியூக்கிளியர் மெடிசின், ஆப்ஸ்டெட்ரிக்ஸ் அண்ட் கைனகாலஜி, ஆப்தால்மாலஜி, ஆர்த்தோபீடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், சைக்யாட்ரி, ரேடியோ தெரபி, பிசிக்கல் மெடிசின் அண்ட் ரீஹேபிலியேஷன் அண்ட் பேத்தாலஜி உட்பட் பல்வேறு படிப்புகள்.




தகுதிகள்: இந்தியன் மெடிக்கல் கவுன்சில் விதிமுறைப்படி, துறை சார்ந்த மருத்துவ பிரிவில் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா படித்தவர்கள் அல்லது இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 




விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31




தேர்வு நாள்:  டிசம்பர் 20




விபரங்களுக்கு: www.nbe.edu.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us