ஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா? | Kalvimalar - News

ஹோமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா?மார்ச் 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கி.பி.1806ம் ஆண்டில் ஜெர்மன் மருத்துவரான ஹனிமேன் உலக சமுதாயத்துக்கு அளித்த மிகச் சிறப்பான மருத்துவ முறை ஹோமியோபதி. பாதுகாப்பான மற்றும் விரைவான தீர்வை நமது நோய்களுக்கு அளிக்கும் முறையாக ஹோமியோபதி அறியப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக இம் மருத்துவத்தால் பயன்பெறுவோரால் பல ஆண்டுகளாக உணரப்படும் முறை ஹோமியோபதி.

குறிப்பிட்ட சில மாதங்களுக்கும் சில ஆண்டுகளுக்கும் இம் மருத்துவத்தை எடுத்துக் கொள்பவருக்கு மீண்டும் அந்த நோய் வராமலிருப்பதையும் நாம் காண முடிகிறது. செடிகள், மினரல்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் அடிப்படை மருத்துவப் பொருளானது டைல்யூட் செய்யப்பட்டு சிறப் பான மருந்தாகச் செயல்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., போன்ற மனித குலம் காக்கும் படிப்புகளை விட இன்று நமது இளைஞர்கள் இன்ஜினியரிங் படிப்புகளையே நாடுவதைப் பார்க்கிறோம். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பெருகி வரும் விழிப்புணர்ச்சியால் ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவ முறைகளும் பிரபலமடைந்து வருகின்றன. இதில் சிறப்பான திறன் பெறுபவர்கள் ஆங்கில மருத்துவர்களுக்கு இணையாக சம்பாதிப்பதையும் காண்கிறோம்.

எனவே பிளஸ் 2 முடித்துவிட்டு 4 ஆண்டு ஹோமியோபதி படிப்பை நீங்கள் மேற்கொண்டு அதில் சிறப்பான திறன் பெற்றால் ஒரு சிறப்பான எதிர்காலம்

உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us