யு.கே., உதவித்தொகை | Kalvimalar - News

யு.கே., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

உயர்ந்த குறிக்கோள், தலைமைப் பண்பு பெற்றவர்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் யு.கே.,வில் உதவித்தொகையுடன் கூடிய ஓர் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிக்க, செவனிங் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்
* யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க, தகுதியான இளநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* யு.கே.,வில் படித்து பட்டம்பெற்ற பிறகு குறைந்தது 2 ஆண்டுகளில் சொந்த நாடு திரும்பும் எண்ணம் கொண்டிருக்க வேண்டும். 
* வரும் 16 ஜூலை 2020ம் தேதிக்குள் யு.கே., பல்கலைக்கழகங்களில் ஏதேனும் மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் ஏதேனும் ஒன்றில், நிர்பந்தமற்ற சேர்க்கை கடிதத்தை பெற்றிருக்க வேண்டும். 
* செவனிங் உதவித்தொகை பெறுவதற்கு உரிய ஆங்கில மொழிப் புலமையை பெற்றிருக்க வேண்டும். 

ஆங்கில மொழிப் புலமை
அகடமிக் ஐ.இ.எல்.டி.எஸ்., பியர்சன் பி.டி.இ. அகடமிக், டோபல் ஐ.பி.டி., சி1 அட்வான்ஸ்டு, டிரினிட்டி ஐ.எஸ்.இ. 2 (பி2) ஆகிய ஆங்கில மொழிப் புலமை தகுதித்தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை விபரம்
இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக் கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, யு.கே., சென்று வருவதற்கான பயண செலவு, விசா கட்டணம், யு.கே.வில் நடைபெறும் செவனிங் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கான போக்குவரத்து செலவு ஆகியவை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் படிப்புகளுக்கு உரிய கல்வித்தகுதிகள், பணி அனுபவம் மற்றும் உரிய பரிந்துரைகள் ஆகியவற்றை பெற்றவர்கள் உரிய விபரங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 5, 2019

விபரங்களுக்கு: www.chevening.org/scholarship/india

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us