எம்.பி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் - ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



கல்வி வளாகங்கள்: புதுடில்லி, கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய பகுதிகளில் ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன.



தேர்வு செய்யப்படும் முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் நுழைத்தேர்வு மூலம் இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி நிறுவனத்தின் சார்பாக, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்.டி.ஏ.,) நுழைவுத்தேர்வை நடத்துகிறது.



தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 25



நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 1



விபரங்களுக்கு:  www.iift.edu / www.nta.ac.in 




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us