உதவித்தொகை | Kalvimalar - News

உதவித்தொகை

எழுத்தின் அளவு :

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.




தேர்ந்தெடுக்கப்படும் முறை: பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.




தகுதிகள்: மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள். பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2018-19ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டு தேர்வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.




விண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுக வேண்டும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16




விபரங்களுக்கு: www.dge.tn.gov.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us