என்.ஐ.டி.,யில் பிஎச்.டி., | Kalvimalar - News

என்.ஐ.டி.,யில் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் - என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.




படிப்பு: முழுநேர மற்றும் பகுதி நேர படிப்பாக பிஎச்.டி., இன் டிசைன்




வளாகங்கள்: அகமதாபாத், பெங்களூரு மற்றும் காந்திநகர்




தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிசைன், ஆர்கிடெக்சர், பைன் ஆர்ட்ஸ், அப்ளைடு ஆர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான படிப்பை படித்திருக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை: முதுநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், பிஎச்.டி., படிப்பிற்கான ஆராய்ச்சி பரிந்துரை, டிசைன் ரிசர்ச் டெஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். முழுநேரமாக சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வாய்ப்பும் உண்டு.




விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us