நெட் தேர்வு | Kalvimalar - News

நெட் தேர்வு

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரியவும், ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்-எனும் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி வாய்ப்பை பெறவும் அவசியம் எழுத வேண்டிய தகுதி தேர்வான, நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் -நெட் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி - என்.டி.ஏ., இத்தேர்வை நடத்துகிறது.

பாடப்பிரிவுகள்: அடல்ட் எஜுகேஷன், ஆந்த்ரோபாலஜி, அரபிக், ஆர்கியாலஜி, காமர்ஸ், கிரிமினாலஜி, எக்னாமிக்ஸ், எஜுகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ், இங்கிலிஷ், என்விரான்மென்டல் சயின்சஸ், பாரின்சிக் சயின்ஸ், பிரெஞ்ச், ஜியாகிரபி, ஹிந்தி, ஹிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், மாஸ்கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், மியூசிக், பிலாசபி, பிசிக்கல் எஜுகேஷன், பொலிட்டிக்கல் சயின்ஸ், சைக்காலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், சோசியல் மெடிசின் அண்ட் கம்யூனிட்டி ஹெல்த், சோசியல் வொர்க், சோசியாலஜி, தமிழ், தெலுங்கு, வுமன் ஸ்டடீஸ், யோகா, சட்டம் உட்பட 81 வகையான பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தகுதிகள்: துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.ஆர்.எப்., உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. எனினும் விதிமுறைப்படி, சிறப்பு பிரிவினர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் மற்றும் அதிகபட்ச வயதில் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் தகுதிக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு வயதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 9

தேர்வு நாள்: டிசம்பர் 2 முதல் 6 வரை

விபரங்களுக்கு: https://ugcnet.nta.nic.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us