ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பு | Kalvimalar - News

ஐ.ஐ.டி.,யில் ஆராய்ச்சி படிப்பு

எழுத்தின் அளவு :

குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பாடப்பிரிவுகள்: பயோலஜிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியரிங், காக்னிட்டிவ் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எர்த் சயின்சஸ், ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ், எலக்ட்டிரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ்.

கல்வித்தகுதி: துறை சார்ந்த பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் எம்.ஏ., / எம்.எஸ்சி., / பி.டெக்., / எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர, துறையை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பெரும்பாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றாலும், தேவைப்படும் பட்சத்தில் நுழைவுத்தேர்வும் நடத்தப்படும். மேலும், மாணவரது கல்வி செயல்திறன் மற்றும் நோக்க அறிக்கை ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 4
நுழைவுத்தேர்வு / நேர்முகத்தேர்வு: நவம்பர் 1 -3

விபரங்களுக்கு: www.iitgn.ac.in/phd.htm

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us