மேட் தேர்வு | Kalvimalar - News

மேட் தேர்வு

எழுத்தின் அளவு :

நாட்டின் முக்கிய மேலாண்மை நுழைவுத் தேர்வுகளில் ஒன்று அனைத்து இந்திய மேலாண்மை கழகம் - ஏ.ஐ.எம்.ஏ., நடத்தும் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனும் மேட் தேர்வு!

பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் மேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் மற்றும் காகித வழி என இரண்டு முறைகளில் இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டு தேர்வுகளையுமே ஒருவர் எழதலாம். லேங்குவேஜ் காம்ப்ரிஹென்சன், மேத்மெடிக்கல் ஸ்கில்ஸ், டேட்டா அனலைசஸ் அண்ட் சபீசியன்சி, இன்டெலிஜன்ஸ் அண்ட் கிரிட்டிக்கல் ரீசனிங், இந்தியன் அண்ட் குலோபல் என்விரான்மென்ட் ஆகிய பிரிவுகளில் இருந்து பிரிவுக்கு 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.

தேர்வு நேரம்: 2.30 மணிநேரம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
கம்ப்யூட்டர் வழி தேர்வு - செப்டம்பர் 8
காகித வழி தேர்வு - செப்டம்பர் 16

தேர்வு நாள்:
கம்ப்யூட்டர் வழி தேர்வு - செப்டம்பர் 14
காகித வழி தேர்வு - செப்டம்பர் 21

விபரங்களுக்கு: https://www.aima.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us