கேட் 2019 தேர்வு | Kalvimalar - News

கேட் 2019 தேர்வு

எழுத்தின் அளவு :

நாட்டின் முக்கிய மேலாண்மை கல்வி நிறுவனங்களான, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் -ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான தகுதித் தேர்வு காமன் அட்மிஷன் டெஸ்ட் எனும் கேட் தேர்வு.


பங்குபெறும் கல்வி நிறுவனங்கள்: அகமதாபாத், அம்ரித்சர், பெங்களூரு, புத்கயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்பூர், ராஞ்சி, ரோடக், சாம்பல்பூர், ஷில்லாங், சிர்மார், திருச்சி, உதய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,கள் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேலாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


கல்வி தகுதி: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றித்திறனாளி மாணவர்கள் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.


தேர்வு முறை: முற்றிலும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடைபெறும் இத்தேர்வு நாடுமுழுவதிலும், 156 தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. வெர்பல் எபிலிட்டி அண்ட் ரீடிங் காம்ப்ரிஹென்சன், டேட்டா இன்டர்பிரடேஷன் அண்ட் லாஜிக்கல் ரீசனிங், குவான்ட்டிடேடிவ் எபிலிட்டி ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.


தேர்வு நேரம்: பிரிவுக்கு தலா 60 நிமிடங்கள் வீதம் மொத்தம் 180 நிமிடங்கள் (3 மணிநேரம்).


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18


தேர்வு நாள்: நவம்பர் 24


விபரங்களுக்கு: https://iimcat.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us