அக்ரி பிசினஸ் படிப்பு | Kalvimalar - News

அக்ரி பிசினஸ் படிப்பு

எழுத்தின் அளவு :

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் அக்ரிகல்ச்சுரல் எக்ஸ்டென்ஷன் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் (அக்ரி -பிசினஸ் மேனேஜ்மெண்ட்) - பி.ஜி.டி.எம்., (ஏ.பி.எம்.,)


தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். மேலும், கேட்-2019 தேர்வு எழுதி இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31


விபரங்களுக்கு: www.manage.gov.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us