உதவித்தொகை | Kalvimalar - News

உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பள்ளி கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் உயர்கல்வி துறை, உதவித்தொகை வழங்குகிறது.

தகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.சி., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலை படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று, மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். 

உதவித்தொகை எண்ணிக்கை: 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.

உதவித்தொகை விபரம்: இளநிலை பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us