ஐ.ஐ.டி.பி.,-மொனாஷ் உதவித்தொகை | Kalvimalar - News

ஐ.ஐ.டி.பி.,-மொனாஷ் உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி மும்பை மற்றும் ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஐ.ஐ.டி.பி.,-மொனாஷ் ரிசர்ச் அகாடமி நிறுவனம், பிஎச்.டி., படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.


ஆராய்ச்சிக்கான பிரிவுகள்:

* அட்வான்ஸ்டு கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங், சிமுலேஷன் அண்ட் மானுபேக்சர்

* இன்பிராஸ்டரக்ச்சர் இன்ஜினியரிங்

* கிளீன் எனர்ஜி

* வாட்டர்

* நானோடெக்னாலஜி

* பயோடெக்னாலஜி அண்ட் ஸ்டெம் செல் ரிசர்ச்

* ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ்

* டிசைன்


ஆராய்ச்சி காலம்: மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை.


உதவித்தொகை விபரம்:

இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், குறைந்தது ஓர் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் காலத்திற்கு ஆஸ்திரேலிய டாலர் 25,850 வரை உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும், மாணவரது தகுதிகள், பாடத்திட்டத்தை பொறுத்து உதவித்தொகை மாறுபடும்.


தகுதிகள்: 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., பிட்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில், அதிக மதிபெண்களுடன் பி.டெக்., / எம்.டெக்., / எம்.இ., / எம்.எஸ்சி., போன்ற படிப்பை முதல்வகுப்பில் முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜி.ஆர்.இ., கேட், சி.எஸ்.ஐ.ஆர்.-நெட், ஜாம் போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். மேலும், ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோபல் ஆங்கில மொழி புலமை தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 11


விபரங்களுக்கு: www.iitbmonash.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us