ஜாம் தேர்வு அறிவிப்பு | Kalvimalar - News

ஜாம் தேர்வு அறிவிப்பு

எழுத்தின் அளவு :

நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக எழுத வேண்டிய ஜாயின்ட் அட்மிஷன் டெஸ்ட் - ‘ஜாம்-2020’ தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: எம்.எஸ்சி.,(2 ஆண்டுகள்), ஜாயின்ட் எம்.எஸ்சி.-பிஎச்.டி., டியூல் டிகிரி, எம்.எஸ்சி.-எம்.எஸ்.(ரிசர்ச்) / பிஎச்.டி., 

கல்வி நிறுவனங்கள்: இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-ஐ.ஐ.டி., நேஷனல் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி-என்.ஐ.டி, இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி - ஐ.ஐ.இ.எஸ்.டி., சண்ட் லாங்கோவல் இன்ஸ்டிடியுட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி - எஸ்.எல்.ஐ.இ.டி., இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் - ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., ஆகிய கல்வி நிறுவனங்களில் ஜாம் தேர்வின் அடிப்படையிலேயே எம்.எஸ்சி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

கல்வித் தகுதி: பாடப்பிரிவுற்கு ஏற்ப உரிய படிப்பில், மொழிப்பாடம் உட்பட அனைத்து பாடங்களிலும் ஒட்டுமொத்தமாக 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் பதிவு துவங்கும் நாள்: செப்டம்பர் 5

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 8

தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 9, 2020

விபரங்களுக்கு: http://jam.iitk.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us