மேலாண்மை நுழைவுத் தேர்வு | Kalvimalar - News

மேலாண்மை நுழைவுத் தேர்வு

எழுத்தின் அளவு :

நாடுமுழுவதிலும் உள்ள ஏராளமான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைகாக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வே, கேட் எனும் காமன் அட்மிஷன் டெஸ்ட். இத்தேர்விற்கான விண்ணப்பப் பதிவு இன்று துவங்குகிறது.




தகுதிகள்: குறைந்தது 50 சதவித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 சதவித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யு.ஏ., படித்தவர்களும், இளநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 




தேர்வு முறை: 156 மையங்களில், முற்றிலும் கணினி சார்ந்து நடைபெறும் இத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நாட்டிலுள்ள 20 ஐ.ஐ.எம்.,கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்க்கை பெறலாம்.




விண்ணப்ப கட்டணம்: ரூ.1,900. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.950.




விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18




தேர்வு நடைபெறும் நாள்: நவம்பர் 24




விபரங்களுக்கு: https://iimcat.ac.in




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us