சிறுபான்மையினருக்கு உதவித்தொகை | Kalvimalar - News

சிறுபான்மையினருக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில், ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு உதவித்தொகைகளை வழங்குகிறது.


ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை

தகுதிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: வகுப்பை பொறுத்து மாதம் ரூ.600 வரை வழங்கப்படும்.


போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை

தகுதிகள்: 11ம் மற்றும் 12ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் இதர செலவினங்களுக்கு மாதம் ரூ.380 வரையிலும் வழங்கப்படும்.


மெரிட் கம் மீன்ஸ் உதவித்தொகை

தகுதிகள்: இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரது ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் இதர செலவினங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட 85 கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 15


விபரங்களுக்கு: https://scholarships.gov.in/


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us