எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
எம்.சி.ஏ.,
எம்.சி.ஏ., (லேட்டரல் என்ட்ரி)
பி.ஜி.டி.சி.ஏ.,

தகுதிகள்: 
எம்.சி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,(லேட்டரல் என்ட்ரி) படிப்புகளில் சேர்க்கை பெற துறை சார்ந்த இளநிலை பட்டப்படிப்புடன், ‘டான்சாட்’ எழுதியிருக்க வேண்டும். டான்சாட் தேர்வை எழுதாதவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பி.யு.எம்.சி.ஏ.இ.டி., நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இரண்டு மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி (25 சதவீதம்), அனலிட்டிக்கல் ரீசனிங் (25 சதவீதம்), லாஜிக்கல் ரீசனிங் (25 சதவீதம்), கம்ப்யூட்டர் அவர்னஸ் (15 சதவீதம்), கம்யூனிகேஷன் எபிலிட்டி (10 சதவீதம்) திறன்கள் பரிசோதிக்கப்படும். பி.ஜி.டி.சி.ஏ., படிப்பிற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையை உரிய சான்றிகளுடன் நேரடியாக அணுகி உடனடி சேர்க்கை பெறலாம்.

விபரங்களுக்கு: 97900 04351

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us