விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

எழுத்தின் அளவு :

இன்போசிஸ் அறக்கட்டளை, ஆரோஹன் சமூகப் புதுமை விருதுகள் 2019க்கு தகுதியானவர்களை எதிர்பார்த்துள்ளது.


குறைவான வசதிகளைப் பெற்றுள்ளோரின் வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தனித்துவமிக்க தீர்வுகளை உருவாக்கும் திட்டங்களை வகுத்துள்ள தனிநபர்கள், குழுக்கள் மற்றும் என்.ஜி,ஓ.,க்களை அடையாளம் காணும் மற்றும் அவர்களை கவுரவிக்கும் நோக்கில் இந்த விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஆறு வகை விருதுகள்:


1. ஆரோக்கியப் பராமரிப்பு

2. கிராமப்புற மேம்பாடு

3. ஆதரவற்றோர் பராமரிப்பு

4. பெண்கள் பாதுகாப்பு மற்றும் திறனளிப்பு

5. கல்வி மற்றும் விளையாட்டுகள்

6. நிலைத்திருத்தல் தன்மை


விண்ணப்பிக்கும் முறை: இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆரோஹன் சமூகப் புதுமை விருதுகள் இணையதளத்தில் தங்களது பணிகளை விவரிக்கும் வகையிலான வீடியோக்களை அப்லோடு செய்ய வேண்டும். 


தேர்வு பெற்றவர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுவதோடு, அவர்களது திட்டத்தை மேலும் மேம்படுத்தும் மற்றும் சமூகத்தாக்கத்திற்கு ஏற்ப அவற்றை மாற்றும் வகையில் 12 வார கால தொழில்நுட்ப பயிற்சி, ஐ.ஐ.டி., ஹைதராபாத்தில் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30 


விபரங்களுக்கு:  www.infosys.com/aarohan

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us