நுால் வெளியீட்டு விழா காங்., அழகிரி பங்கேற்பு | Kalvimalar - News

நுால் வெளியீட்டு விழா காங்., அழகிரி பங்கேற்புடிசம்பர் 05,2023,10:03 IST

எழுத்தின் அளவு :

புவனகிரி: புவனகிரியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எழுதிய நூலை காங்., தலைவர் அழகிரி வெளியிட்டார்.


புவனகிரியில் நடந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நெடுமாறன் எழுதிய தெருக்குறள் மற்றும் வெற்றியை நோக்கி ஆகிய இரண்டு நுால்களை, தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி வெளியிட்டு பேசினார். முதல் பிரதியை முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் பெற்றுக் கொண்டார்.


அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அரங்கப்பாரி, புவனகிரி பாரதி பள்ளி நிர்வாகி அன்பழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் வீரமணி, கவிஞர் கல்யாணசுந்தரம், இறைபணி மன்ற பொறுப்பாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நூலாசிரியர் நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழாசிரியர் செந்தாமரை நன்றி கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us