பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


துறைகள்: காமர்ஸ், கோஆப்ரேஷன், எக்னாமிக்ஸ், எஜுகேஷன், எஜுகேஷன் டெக்னாலஜி, ஹிஸ்ட்ரி, அடல்ட் எஜுகேஷன், ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், பிலாசபி,  பிசிக்கல் எஜுகேஷன், யோகா, சோசியல் வொர்க், சோசியாலஜி, வுமன் ஸ்டடீஸ், பயோகெமிஸ்ட்ரி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், பயோமெடிக்கல் சயின்ஸ், பயோடெக்னாலஜி, பிளாண்ட் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எம்பெடட் சிஸ்டம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் சயின்ஸ், என்விரான்மெண்டல் மேனேஜ்மெண்ட், என்விரான்மெண்டல் சயின்ஸ், ஜியோகிரபி, ஜியோலஜி, மரைன் சயின்ஸ், மேத்மெடிக்ஸ், மைக்ரோபயாலஜி, பிசிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், நானோடெக்னாலஜி, ரீகேபிலிடேஷன் சயின்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ், அனிமல் சயின்ஸ், விசுவல் கம்யூனிகேஷன், மீடியா, மேனேஜ்மெண்ட், தமிழ், அரபிக், இங்கிலிஷ், சமஸ்கிருதம் உட்பட பல்வேறு துறைகள்.


தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில், முழுநேர முதுநிலை பட்டப்படிப்பில், 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. 


தேர்வு முறை: பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.பில்., நெட், செட் தேர்ச்சி பெற்றவர்கள் நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.


விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31


விபரங்களுக்கு: www.bdu.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us