எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள் | Kalvimalar - News

எம்.பில்., பிஎச்.டி., படிப்புகள்

எழுத்தின் அளவு :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

துறைகள்: கலை, அறிவியல், கடல்சார் அறிவியல், மொழியியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வியியல், நுண் கலை, வேளாண்மை, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகள்.

தகுதிகள்: பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைப்படி துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்புடன் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த ஆன்லைன் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் பல்கலைக்கழக பதிவாளருக்கு அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை: பொது நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு: ஆகஸ்ட் 18

விபரங்களுக்கு: www.annamalaiuniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us