தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிலரங்கு | Kalvimalar - News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பயிலரங்குடிசம்பர் 03,2023,10:49 IST

எழுத்தின் அளவு :

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், உலக உணவு தினத்தை முன்னிட்டு நிலையான உணவு முறைகளுக்கான பொறியியல் அணுகுமுறைகள் என்ற பெயரில், சர்வதேச பயிலரங்கம், நேற்று நடந்தது.


இதில், உணவு பதப்படுத்தும் துறைக்கு தேவையான நிலையான அணுகுமுறைகள், நிலையான உணவு முறை மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள், பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம், இந்தியாவில் உருவாகி வரும் உணவு போக்குகள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.


வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பொறியியல் கல்லுாரி டீன் ரவிராஜ், வேளாண் துறை டீன் வெங்கடேச பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us