தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்! | Kalvimalar - News

தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்!டிசம்பர் 02,2023,10:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தமிழ் திறனறி தேர்வு முடிவு வெளியாவது, நாளை மறுதினத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களில், தமிழ் மொழியில் திறன் பெற்றவர்களுக்கு, முதல்வரின் கல்வி உதவித்தொகை திட்டம், இரு ஆண்டுகளாக அமலில் உள்ளது.


இதில் ஆண்டுதோறும், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், இந்த உதவி தொகை பெறுவதற்கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, அக்., 15ம் தேதி நடந்தது. இதில், 2 லட்சத்து, 36,910 பேர் பங்கேற்றனர்.


தேர்வு முடிவுகள் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us