மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பொருளாதார ரீதியாக சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டைளையின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்: குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். தமிழகம் அல்லது புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 2019ம் ஆண்டு நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 75 சதவீத மஹிப்பெண் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் மற்றும் இதர தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திறனாய்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவற்றில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை: 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21

விபரங்களுக்கு: www.vidyadhan.org மற்றும் 7339659929.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us