பள்ளி விடுமுறையில் பாரபட்சம்: பீஹார் அரசுக்கு கண்டனம் | Kalvimalar - News

பள்ளி விடுமுறையில் பாரபட்சம்: பீஹார் அரசுக்கு கண்டனம்நவம்பர் 29,2023,10:24 IST

எழுத்தின் அளவு :

பாட்னா: பீஹாரில் ஹிந்து பண்டிகைகளுக்கான அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகள் இயங்கும் வகையில் அட்டவணை வெளியிட்ட, அம்மாநில அரசுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று முன்தினம் கல்வித்துறை சார்பில் 2024ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டன. 


இதில், பெரும்பாலான ஹிந்து பண்டிகைகளுக்கான விடுமுறை தினங்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மாநில பா.ஜ., மூத்த தலைவர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு, முதல்வர் நிதீஷ் குமாரின் அரசுக்கு எதிரான தங்கள் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். 


இதுகுறித்து பா.ஜ., ராஜ்யசபாவின் எம்.பி., யும், பீஹாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறியதாவது:


ஹிந்து மத நம்பிக்கைகள் மீதான தாக்குதலாக இதை கருதுகிறோம். குறிப்பாக ராம நவமி, கோகுலாஷ்டமி, ரக்சா பந்தன் போன்ற ஹிந்து பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. அதே நேரத்தில், முஸ்லிம் மத பண்டிகைகளுக்கு அதிகளவு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசு விடுமுறைக்கால அட்டவணையை திரும்ப பெற்று, உரிய மாறுதல்களை செய்து வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுங்கட்சி தரப்பினர் கூறுகையில், கல்வித்துறை வெளியிட்ட விடுமுறைக்கால அட்டவணை இறுதியானது அல்ல; முதல்வர் நிதீஷ் குமார் ஒப்புதல் அளிக்கும் முன், இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, என்றனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us