எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் இட ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள், ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, இ.எஸ்.ஐ. மற்றும் பி.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர். மருத்துவக் கல்லூரிகள்,  ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், இரண்டு விண்ணப்பிங்களாக, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதிகள்: பிளஸ் 2 மற்றும் நீட் -2019 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தமிழக அரசு அறிவித்துள்ள ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20

விபரங்களுக்கு: www.tnhealth.org  மற்றும் www.tnmedicalselection.org

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us