பேராசிரியர்களை நியமிக்காமல் படிப்புகள் நடத்தக்கூடாது | Kalvimalar - News

பேராசிரியர்களை நியமிக்காமல் படிப்புகள் நடத்தக்கூடாதுநவம்பர் 27,2023,09:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: உரிய கல்வித்தகுதியுடைய பேராசிரியர்களை நியமிக்காமல், எந்த படிப்பையும் துவங்கக்கூடாது என கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தியுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்:


கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளில், பேராசிரியர் நியமனம் குறித்து, முக்கிய அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்லுாரிகள் எந்த தொழில்நுட்ப படிப்பை துவங்கி, அதில் மாணவர்களை சேர்த்தாலும், அதற்கு முன், ஏ.ஐ.சி.டி.இ., யின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.


உரிய வகுப்பறை கட்டடம், ஆய்வகங்கள், நுாலகங்களில் சம்பந்தப்பட்ட படிப்புக்கு தேவையான புத்தகங்கள் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஏ.ஐ.சி.டி.இ., விதிப்படி, உரிய கல்வித்தகுதியுடைய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்காமல், படிப்பை துவங்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. இவ்வாறு விதிகளில் கூறப்பட்டுள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us