ஐ.ஐ.எஸ்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியுட் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
பி.டெக்.,-ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் - 4 ஆண்டுகள்
பி.டெக்.,- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ஏவியானிக்ஸ்) - 4 ஆண்டுகள்
பி.டெக்., அண்ட் எம்.எஸ்., / எம்.டெக்., (டியூல் டிகிரி) - 5 ஆண்டுகள்

தகுதிகள்: ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் -2019 தேர்வை எழுதியிருக்க வேண்டும். இதர விரிவான தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

குறிப்பு: இக்கல்வி நிறுவனத்தில் சிறப்பாக படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோ அமைப்பு நேரடி பணி நியமனத்தை வழங்குகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17

ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் நாள்: ஜூன் 19

விபரங்களுக்கு: www.iist.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us