தமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

தமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு, கலை, அறிவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஓர் உயராய்வு மையமான தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
எம்.ஏ.,- 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,- 2 ஆண்டுகள்
எம்.பில்., - ஓர் ஆண்டு 

துறைகள்:
சிற்பம், இசை, நாடகம், ஓலைச்சுவடி, அரிய கையெழுத்துச் சுவடி, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல், அயல்நாட்டுத்தமிழ்க் கல்வி, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூக அறிவியல், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி, கல்வியியல் மற்றும் மேலாண்மையியல், இலக்கியம், மொழியியல், தத்துவம், பழங்குடி மக்கள் ஆய்வு, நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியம், சித்த மருத்துவம், தொல் அறிவியல், தொழில் மற்றும் நில அறிவியல் (நிலத்தியல்), கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல், நூலகம் மற்றும் தகவல்அறிவியல்.

விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழக இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய விண்ணப்பக் கட்டணத்துடன் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் என்ற பெயரிலான வங்கி வரைவோலையுடன் பல்கலைக்கழகத்திற்கு நிறைவு செய்த விண்ணப்பத்தினை அனுப்பிவைக்கலாம். பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரிலும் அல்லது அஞ்சல் வழியாகவும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் 
முதுநிலை பட்டப்படிப்புகள்: மே 30
எம்.பில்.,: ஜூன் 15

விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us