எம்.எஸ்., பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.எஸ்., பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.


படிப்புகள்:

எம்.எஸ்., 

பிஎச்.டி.,

எம்.எஸ்.,+பிஎச்.டி., (ஒருங்கிணைந்த படிப்பு)


தகுதிகள்:

எம்.எஸ்., மற்றும் எம்.எஸ்.,+பிஎச்.டி., படிப்புகளில் சேர  பி.இ.,/பி.டெக்.,,/பி.எஸ்., ஆகிய ஏதேனும் ஒரு நான் கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நேரடி பிஎச்.டி., யில் சேர்க்கை பெற, எம்.எஸ்., படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை:

பிஎச்.டி., படிப்பவர்களுக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும், எம்.எஸ்., படிப்பவர்களுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாயும் படிக்கும் குறிப்பிட்ட படிப்புக்காலம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை: சென்னை, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


விபரங்களுக்கு: www.iitm.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us