அண்ணா பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

அண்ணா பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள, அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


படிப்புகள்:

* எம்.எஸ்சி., - மேத்மெடிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, எலக்ட்ரானிக் மீடியா - 2 ஆண்டுகள்

* எம்.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி - 5 ஆண்டுகள் (ஒருங்கிணைந்த படிப்பு)

* எம்.பில்., - மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ் / மெடிக்கல் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, இங்கிலிஷ், கிரிஸ்ட்டல் சயின்ஸ், அப்ளைடு ஜியாலஜி.


தகுதிகள்: 

இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., படிப்பிற்கு, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஐந்தாண்டு எம்.எஸ்சி., படிப்பிற்கு பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். எம்.பில்., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை: அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20


விபரங்களுக்கு: www.annauniv.edu


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us