அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை | Kalvimalar - News

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கை

எழுத்தின் அளவு :

புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர, பத்தாம் வகுப்பு மற் றும் பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில் நுட்பக் கல்லுாரியில், 2019-20ம் கல்வி ஆண்டிற்கானமுதலாண்டு மற்றும்இரண்டாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கை துவங்கியுள்ளது. இங்கு, சிவில் இன்ஜினியரிங் 2-2- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிரியங், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமெண்ட்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங், மார்டன் ஆபிஸ் பிராடிக்ஸ் ஆகிய 8 பாடப்பிரிவுகள் உள்ளன.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் முதலாம் ஆண்டும், பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., முடித்த மாணவ மணவியர் நேரடியாக இண்டாம் ஆண்டிலும் சேரலாம். குறைந்த கட்டணத்தில் பயில அரசு வசதி செய்துள்ளது. இக்கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவியருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர, அரசு சிறப்பு வேலை வாய்ப்புகளை முகாம்களை நடத்தி வருகிறது.


இக்கல்லுாரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் http://centacpuducherry.in/polytechnic என்ற இணைய தளத்தில் ஆன்லைனில், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஆன் லைன் பதிவு செய்ய இக்கல்லுாரி நிர்வாகத்தால் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us