தொழில்முறை படிப்புகள் | Kalvimalar - News

தொழில்முறை படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் கல்வி நிறுவனம், அப்பேரல் டிரைனிங் அண்ட் டிசைன் செண்டர் (ஏ.டி.டி.சி.,) உடன் இணைந்து சில இளநிலை வொகேஷனல் படிப்புகளை வழங்குகிறது.

படிப்புகள்:
பி.வொக்., இன் அப்பேரல் மேனுபேக்சரிங் அண்ட் ஆண்ட்ருபிரனர்ஷிப்
பி.வொக்., இன் பேஷன் டிசைன் அண்ட் டீடெய்ல்

கல்வித்தகுதி: பிளஸ் 2 படித்த மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

மாணவர் சேர்க்கை முறை: ஸ்கிரீனிக் டெஸ்ட் அல்லது ஸ்கைப் இன்டர்வியூ மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 8

விபரங்களுக்கு: www.rgniyd.gov.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us