விளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா? | Kalvimalar - News

விளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா? மார்ச் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தேசிய விளையாட்டு ஆணையம் எனப்படும் என்.எஸ்.ஏ., விளையாட்டுடன் தொடர்புடைய உதவித் தொகையை தந்து வருகிறது. தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வரையிலான உதவித் தொகையை இது தருகிறது.

பிளஸ் 2 வரையிலான தகுதியைப் பெற்றிருப்பவருக்கு இது தரப்படுகிறது. பன்னாட்டு/சீனியர்/ஜூனியர் நேஷனல்ஸ்/சீனியர் நேஷனல்ஸ் போன்ற பள்ளிகள் அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருப்பவருக்கும் உதவித்தொகையை இது தந்து வருகிறது. இது ஆண்டுக்கு ரூ.8 ஆயிரத்து 400 வரை தரப்படுகிறது. இது போலவே பல உதவித் தொகைகள் விளையாட்டுத் திறன் பெற்று மாநில/தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருப்பவருக்குத் தரப்படுகிறது.

முழு விபரங்களை அறியும் முகவரி:
The Regional Director,
Sports Authority Of India,
Netaji Subhas National Institute of Sports,
Moti Bagh, Patiala  147001.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us