பாரதியார் பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

பாரதியார் பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நேரடி முதுநிலை, இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகள்:

எம்.எஸ்சி., படிப்புகளாக, மேத்மெடிக்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ் வித் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன், பயோ-இன்பர்மேடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா அனலிட்டிக்ஸ், என்விரான்மெண்டல் சயின்சஸ், எக்னாமெட்ரிக்ஸ், இ-லேர்னிங் டெக்னாலஜி, அப்ளைடு சைக்காலஜி, டெக்ஸ்டைல்ஸ் அண்ட் அப்பேரல் டிசைன், எம்.ஏ., படிப்புகளாக, தமிழ், லிங்குஸ்டிக்ஸ், எக்னாமிக்ஸ், வரலாறு, சோசியாலஜி, உமன் ஸ்டடீஸ், கேரியர் கய்டன்ஸ் மற்றும் எம்.காம்., எம்.எட்., மாஸ்டர் ஆப் சோசியல் ஒர்க், மாஸ்டர் ஆப் லைப்ரரி இன்பர்மேஷன் சயின்சஸ், மாஸ்டர் ஆப் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், பல்வேறு முதுநிலை டிப்ளமோ, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.


நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய படிப்புகள்:

எம்.எஸ்சி., படிப்புகளாக, மேத்மெடிக்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ், பிசிக்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, இண்டஸ்டிரியல் பயோடெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, எம்.ஏ.,-இங்கிலிஷ் லிட்ரெச்சர், பி.பி.எட்., எம்.பி.எட்., எம்.சி.ஏ., உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.


கல்வித்தகுதி: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். 


விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31


விபரங்களுக்கு: www.b-u.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us