எம்.டெக்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.டெக்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இயங்கி வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி’ (என்.ஐ.இ.எல்.ஐ.டி) கல்வி நிறுவனத்தில் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.


படிப்புகள்:

 எம்.டெக்., இன் எம்பேட்டட் சிஸ்டம்

 எம்.டெக்., இன் எலக்ட்ரானிக்ஸ் டிசைன் அண்ட் டெக்னாலஜி


தகுதிகள்:

இந்திய குடிமகனாகவும், ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பி.டெக்., பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்ணுடன் நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும். மேலும், கேட் தேர்வினை எழுதியிருப்பது வாய்ப்பை எளிதாக்கும். கேட் தேர்வு எழுதாத மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்கும் முறை:

என்.ஐ.இ.எல்.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்.


சேர்க்கை முறை:

கேட் தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். காலி இடம் இருக்கும்பட்சத்தில் மட்டுமே கேட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும்.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31


விபரங்களுக்கு: www.nielit.gov.in/calicut


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us