ஐ.எம்.யூ.,-சி.இ.டி., தேர்வு | Kalvimalar - News

ஐ.எம்.யூ.,-சி.இ.டி., தேர்வு

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் இந்திய கடற்சார் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேர்க்கைக்காக நடத்தப்படும் ‘காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
 பி.டெக்., மரைன் இன்ஜினியரிங்
 பி.டெக்., நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங்
 பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்ஸ்
 பி.எஸ்சி., ஷிப் பில்டிங் அண்ட் ரிபேர்
 டி.என்.எஸ்., டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்
 எம்.பி.ஏ., போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்
 எம்.பி.ஏ., இண்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
 எம்.எஸ்சி., கமர்ஷியல் ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்
 எம்.டெக்., நேவல் ஆர்க்கிடெக்ச்சர் அண்ட் ஓஷன் இன்ஜினியரிங்
 எம்.டெக்., டிரெட்ஜிங் அண்ட் ஹார்பர் இன்ஜினியரிங்
 எம்.டெக்., மரைன் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்
 எம்.எஸ்., பை ரிசர்ச்
 பிஎச்.டி.,

தகுதிகள்: படிப்புகளுக்கேற்ப தனித்தனியே தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகையால் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு தாங்கள் விரும்பும் படிப்பிற்கான தகுதிகளைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 5

தேர்வு நாள்: ஜூன் 1

விபரங்களுக்கு: www.imu.edu.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us