பினான்ஸ் படிப்புகள் | Kalvimalar - News

பினான்ஸ் படிப்புகள்

எழுத்தின் அளவு :

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பினான்ஸ்’ கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
 மேனேஜ்மெண்ட் ஆப் பிஸ்னஸ் பினான்ஸ் (எம்.பி.எப்.,) - 2 ஆண்டுகள்
 போஸ்ட் கிராட்ஜூவேட் புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.பி.எம்.,) - 11 மாதங்கள்
 பெலோ புரோகிராம் இன் அட்மினிஸ்ட்ரேஷன் - பினான்ஸ் (எப்.பி.ஏ.,) - 3 ஆண்டுகள்

தகுதிகள்:
எம்.பி.எப்., படிப்பிற்கு துறை சார்ந்த இளநிலை பிரிவில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட், எக்ஸாட், ஜிமேட் ஆகிய தகுதி தேர்வுகளையும் எழுதியிருக்க வேண்டும். பி.ஜி.பி.எம்., படிப்பிற்கு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். எப்.பி.ஏ., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

சேர்க்கை முறை:
தகுதி தேர்வில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் அவர்களின் கல்வி திறன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.

விபரங்களுக்கு: www.iif.edu

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us