ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான பெங்களூருவில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்’ கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

படிப்பு:
பி.எஸ்சி., - 4 ஆண்டுகள்

தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படித்தவராக இருக்க வேண்டும். அவற்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருப்பதோடு, தேசிய தகுதித் தேர்வுகளான கே.வி.பி.வை., ஐ.ஐ.டி.- ஜே.இ.இ., நீட் - யுஜி ஆகியவற்றில் ஏதேஞும் ஒன்றை எழுதி இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக, மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

சேர்க்கை முறை:
தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் உதவித்தொகைகளும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.iisc.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us