பிர்மிங்காம் பல்கலை உதவித்தொகை | Kalvimalar - News

பிர்மிங்காம் பல்கலை உதவித்தொகை

எழுத்தின் அளவு :

ஐரோப்பாவில் உயர்கல்வி பயில விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களுக்கு பிர்மிங்கம் பல்கலைக்கழகம் இளநிலை பட்டப்படிப்பிற்கான உதவித்தொகையை வழங்குகிறது!

இந்திய மாணவர்களுக்கான பிரத்யேக ஸ்காலர்ஷிப்
ஐரோப்பாவின் பிரசித்திப்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ‘யூனிவர்சிட்டி ஆப் பிர்மிங்காம்’ கல்வி நிறுவனமானது, பல்வேறு துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ‘அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் ஸ்காலர்ஷிப்ஸ் -2019’ என்கிற இளநிலை பட்டப்படிப்பிற்கான உதவித்தொகையை வழங்கவுள்ளது.

துறைகள்:
 ஆர்ட்ஸ் அண்ட் லா
 இன்ஜினியரிங் அண்ட் பிசிக்கல் சயின்சஸ்
 லைப் அண்ட் என்விரான்மெண்டல் சயின்சஸ்
 சோஷியல் சயின்சஸ்

தகுதிகள்:
இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே இங்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் பி.பி.சிஎச்.பி., பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சேர்க்கை பெற்ற பின் அங்கு தங்கி பயில்வதற்கு மற்றும் விமான பயணங்களுக்கு தேவைப்படும்  பொருளாதார வசதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்காக முதலாம் ஆண்டு 2,500 பவுண்ட் (2,26,705 ரூபாய்) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
பிர்மிங்காம் பல்கலையின் இந்திய கிளை நிர்வாகங்களின் வாயிலாக மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

 தி சோப்ராஸ் - டில்லி
 ஏஸ்பையர் ஓவர்சீஸ் எஜூகேஷன் எல்.எல்.பி - டில்லி
 கிருஷ்ணா கன்சல்டன்ட்ஸ் - நாக்பூர்
 ஐ.டி.பி., எஜூகேஷன் கன்சல்டன்ட்ஸ் - குர்கான்

தேர்வு முறை:
முழுக்க முழுக்க மாணவர்களின் மதிப்பெண் மற்றும் கல்வி திறனின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகைக்கு உரிய மாணவரக்ள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 7

விபரங்களுக்கு: www.birmingham.ac.uk

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us