பஞ்சாயத் ராஜ் படிப்புகள் | Kalvimalar - News

பஞ்சாயத் ராஜ் படிப்புகள்

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் பஞ்சாயத் ராஜ்’ கல்வி நிறுவனத்தில் பி.ஜி., டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:
 போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் மேனேஜ்மெண்ட் - ரூரல் டெவலப்மெண்ட் (பி.ஜி.டி.எம் - ஆர்.எம்) - 2 ஆண்டுகள்
 போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் ரூரல் டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் (பி.ஜி.டி.ஆர்.டி.எம்) - 1 ஆண்டு

தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் வரை மதிப்பெண்ணில் விலக்கு வழங்கப்படும். கேட், எக்ஸாட், மேட், சிமேட், ஏ.டி.எம்.ஏ ஆகியவற்றில் ஏதேஞும் ஒரு தகுதித் தேர்வினை எழுதியிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும்.

உதவித்தொகை: கல்வியில் சிறந்த, தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள், என்.ஐ.ஆர்.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 8

விபரங்களுக்கு: www.nird.org.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us