உலக வங்கியின் உதவித்தொகை திட்டம் | Kalvimalar - News

உலக வங்கியின் உதவித்தொகை திட்டம்

எழுத்தின் அளவு :

வளர்ச்சி சார்ந்த துறையில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும், இந்தியா போன்ற உலகின் வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஜப்பான் நாட்டு அரசாங்கம் மற்றும் உலக வங்கி இணைந்து ‘ஜாய்ண்ட் ஜப்பான்/வார்ல்ட் பாங்க் கிராட்ஜூவேட் ஸ்காலர்ஷிப் புரோகிராம்’ என்கிற உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!

சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பொது மேம்பாடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, பருவநிலை மாறுபாடு சார்ந்த 200க்கும் மேற்பட்ட படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறுவதோடு, நாடும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், டோக்கியா பல்கலைக்கழகம், யொகாஹமா தேசிய பல்கலைக்கழகம், ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி உட்பட ஏராளமான தலைசிறந்த பல்கலைக்கழகங்களும் இந்த உதவித்தொகை திட்டத்தில் இணைந்துள்ளதால், இவற்றில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு படிக்கலாம்.

தகுதிகள்:
இந்தியா போன்ற வளரும் நாட்டின் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை, துறை சார்ந்த பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். மேம்பாடு சார்ந்த பிரிவில் முழு நேரமாக பணியாற்றும் நபராக இருக்க வேண்டியதும் அவசியம். தாங்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். உலக வங்கி பணியாளர்களின் உறவினராக இருக்கக் கூடாது.

உதவித்தொகைகள்:
முழு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். அடிப்படை மருத்துவ தேவைகளுக்கான தொகை அந்தந்த பல்கலைக்கழகத்தின் வாயிலாக வழங்கப்படும். மாத செலவிற்காக ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்குத் தொகை தரப்படும். தாய் நாட்டிற்கும், கல்வி நிறுவனம் அமைந்துள்ள நாட்டிற்குமான விமான பயணச்சீட்டுடன் 500 அமெரிக்க டாலர்கள் ஒவ்வொரு முறையும் பயண செலவிற்காக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்த உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும். விண்ணப்பத்துடன் உயர்கல்வி பயில விரும்பும் கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றதற்கான ‘அக்சப்டன்ஸ்’ கடிதத்தையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 11

விபரங்களுக்கு: www.worldbank.org/en/programs/scholarships

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us