பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் | Kalvimalar - News

பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர்

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் காட்டுப்பாட்டின் கீழ், டெல்லியில் இயங்கி வரும் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்ச்சர் (எஸ்.பி.ஏ.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

படிப்புகள்:
 எம்.ஆர்க்., (ஆர்கிடெக்ச்சுரல் கன்சர்வேஷன்)
 மாஸ்டர் ஆப் அர்பன் டிசைன்
 எம்.டெஸ்., (இண்டஸ்ட்ரியல் டிசைன்)
 எம்.பிளான்., (என்விரான்மெண்ட்டல் பிளானிங்)
 எம்.பிளான்., (ஹவுசிங்)
 எம்.பிளான்., (ரீஜினல் பிளானிங்)
 எம்.பிளான்., (டிரான்ஸ்போர்ட் பிளானிங்)
 எம்.பிளான்., (அர்பன் பிளானிங்)
 மாஸ்டர் ஆப் லாண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்
 மாஸ்டர் ஆப் பில்டிங் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்

தகுதிகள்:
ஒவ்வொரு முதுநிலை படிப்பிற்கும் அத்துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் எஸ்.பி.ஏ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் சமர்பிக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப்:
கேட் மற்றும் சீட் தகுதி தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் சதவீதத்திற்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 22

நேர்முகத் தேர்வு: ஏப்ரல் 1 முதல் 3ம் தேதி வரை

விபரங்களுக்கு: www.spa.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us