கிராப்ட் அண்ட் டிசைன் | Kalvimalar - News

கிராப்ட் அண்ட் டிசைன்

எழுத்தின் அளவு :

ஜெய்ப்பூரில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கிராப்ட் அண்ட் டிசைன் (ஐ.ஐ.சி.டி.,) கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




படிப்புகள்:


 இண்டக்ரேட்டட் பாச்சுலர் ஆப் வொகேஷன் - 4 ஆண்டுகள்


 இண்டக்ரேட்டட் மாஸ்டர் ஆப் வொகேஷன் - 5 ஆண்டுகள்


 மாஸ்டர் ஆப் வொகேஷன் - 2 ஆண்டுகள்




தகுதிகள்:


இண்டக்ரேட்டட் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வியினை பெற்றிருக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஓர் ஆண்டு சி.எப்.பி.டி., கல்வியினை பெற்றிருக்க வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:


ஐ.ஐ.சி.டி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக, மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.




சேர்க்கை முறை:


தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 14 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் பொது அறிவு, படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு சார்ந்த கருத்தியல் ஆகியவை தேர்வின் மூலம் சோதிக்கப்படும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 28




தேர்வு நாள்: ஏப்ரல் 14




விபரங்களுக்கு: www.iicd.ac.in




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us