பெல்ஜியம் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

பெல்ஜியம் ஸ்காலர்ஷிப்

எழுத்தின் அளவு :

அயல்நாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களை, தங்கள் நாட்டை நோக்கி ஈர்க்க வைக்கும் ஒரு முயற்சியாக, பெல்ஜியம் நாட்டின் அங்கமான பிளாண்டர்ஸ் அரசாங்கம் முதுநிலை பட்டப்படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது!

பெல்ஜியம் மாஸ்டர் மைண்ட் ஸ்காலர்ஷிப்ஸ் 2019 - 20
மொத்தம் மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய பெல்ஜியம் நாட்டில் வடக்கில் அமைந்துள்ளது பிளேமிஷ் பிராந்தியம். பிளாண்டர்ஸ் என அழைக்கப்படும் இப்பிராந்தியத்தை நிர்வகிக்கும் அரசாங்கம், இந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது. அப்பிராந்தியத்திற்கு உட்பட்ட ‘பிளேமிஷ் யுனிவர்சிட்டிஸ்’, ‘ஸ்கூள் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் ஆண்ட்வெர்ப் மெரிடைம் அகாடமி’ ஆகிய கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில், தங்களுக்கு விருப்பமான முதுநிலை பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியும்.

தகுதிகள்:
 பிளாண்டர்ஸ் பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
 முந்தைய பட்டப்படிப்பில் 4.0 ஜி.பி.ஏ.,விற்கு 3.0 பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.
 ஐ.இ.எல்.டி.எஸ்., ஆங்கில தகுதி தேர்வில் குறைந்தது 7.0 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது டோபெல் தேர்வில் 94 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்றிருக்க வேண்டும். 
 சி1 அளவு ஐரோப்பிய கட்டமைப்பை பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும்.
 எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
 ஏற்கனவே பிளெமிஷ் கல்வி நிறுவனங்களில் படித்துக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது. அதேபோல், ’பிரபரடரி புரோகிராம்’ அல்லது தொலைநிலை கல்வியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

உதவித்தொகை:
ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு உதவித்தொகையாக 8,000 யூரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ 6,44,500 ரூபாய்) வழங்கப்படும்.

எண்ணிக்கை: 30 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
உதவித்தொகைக்கு மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க இயலாது. அவர்கள் சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனங்களின் (ஹோஸ்ட் இன்ஸ்டிடியூஷன்) வாயிலாக மட்டுமே தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும். அந்தக் கல்வி நிறுவனங்களின் ‘மொபிலிட்டி - ஆன்லைன் டூல்’ மூலம் மாணவர்கள் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை:
முந்தைய பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதம், விண்ணப்பதாரர்களின் குறிக்கோள் மற்றும் அவர்களது திறமைகள் ஆகியவை மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: www.studyinflanders.be

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us